Saturday, January 16, 2010

இந்தியாவில் தொழிற்கல்வி சேர்க்கை - வழிமுறைகள் II

தமிழகம் தவிர்த்த பிற மாநிலங்களிலுள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைப் பற்றி கடந்த பதிவில் பார்த்தோம்.
தமிழகக் கல்லூரிகளைப் பொறுத்தவரை அவை கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்படுகின்றன‌ .

1.அண்ணா பல்கலைக் கழகங்களின் கீழ்வரும் கல்லூரிகள்.
அ.அரசு பொறியியல் கல்லூரிகள்
ஆ.அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள்
இ. சுயநிதி பொறியுயல் கல்லூரிகள்

2.நிகர்நிலை பல்கலைக் கழகக் கல்லூரிகள்.

அண்ணா பல்கலைக் கழகம் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.

அவை.
1.அண்ணா பல்கலைக் கழகம், சென்னை
2.அண்ணா பல்கலைக் கழகம், கோவை
3.அண்ணா பல்கலைக் கழகம், திருச்சி
4.அண்ணா பல்கலைக் கழகம், நெல்லை

அந்தந்த மாவட்டக் கல்லூரிகள் மற்றும் அருகிலுள்ள மாவட்டக் கல்லூரிகள் அண்ணா பல்கலைக் கழகத்தின் குறிப்பிட்ட பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ளன.தமிழகத்தின் பெரும்பாலான பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலையுடனே இணைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பிரிவும் தனியான சேர்க்கை அறிவிப்புகளை வெளியிட்டு,அதன் உறுப்புக் கல்லூரிகளில் சேர்க்கையை நடத்துகின்றன.எல்லா அண்ணா பல்கலைக் கழகங்களிலும் ஒரே விதமான சேர்க்கை வழிமுறையே பின்பற்றப்படுகிறது.


மாணவன் +2 வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தரப்பட்டியல் தயாரிக்கப்பட்டு,அதன் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது.
+2 வில் பிஸிக்ஸ்,கெமிஸ்ட்ரி,மாத்ஸ் மூன்று பாடங்களில் குறிப்பிட்ட மாணவன் 200க்குப் பெற்ற மதிப்பெண்கள் முறையே 50,50,100க்கும் மாற்றம் செய்யப்படுகிறது.(Physics and Chemistry marks converted to the base of 50 each and Maths marks converted to the base of 100)
அதன் அடிப்படையில் தரப்பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
தரப்பட்டியல் தயாரிக்கும்போது ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால்,அவர் மற்ற பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள்,அவர்களின் பிறந்த தேதி,போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு,அதற்கேற்ப தரப்பட்டியல் தயாரிக்கப்படுகிறது.அத்தரப்பட்டியல்படி கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டு,இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
இவ்வாறான சேர்க்கை அல்லாமல் நிர்வாக ஒதுக்கீடு என்னும் சில இடங்கள் எல்லா கல்லூரிகளிலும் நிர்வாகத்தால் நிரப்பப்படுகின்றன.இதற்காக அனைத்துக் கல்லூரிக் கூட்டமைப்பு நுழைவுத்தேர்வு நடத்தி சேர்க்கையை நடத்துகிறது.இந்த இடங்களில் சேர்வதற்கு குறிப்பிட்ட கல்லூரிகளை நேரடியாக அணுகுவதே சாலச் சிறந்த‌து‌

நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்

நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் அவற்றுக்கேயுரிய தனியான சேர்க்கை வழிமுறைகளை வைத்திருக்கின்றன. சில பல்கலைகள் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வுகளை நடத்துகின்றன. சில பல்கலைக் கழகங்கள் +2 மதிப்பெண் அடிப்படையிலேயே இடமளிக்கின்றன.அப்பல்கலைக் கழகங்களின் இணைய தளத்தை அவ்வபோது பார்ப்பது,சேர்க்கை குறித்த சரியான, மேம்படுத்தப்பட்ட தகவல்களை அளிக்கும்.

இதல்லாமல் இந்திய ராணுவம் SSB board மூலமாக +2 படித்த மாணவர்களுக்கு பொறியியல்,மருத்துவம் போன்ற படிப்புகளை இலவசமாக வழங்குகிறது.இதில் ஒரு நிபந்தனை என்னவெனில் படிப்பு முடித்தவுடன் சில ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிய வேண்டும்.இதற்கான அறிவிக்கை அக்டோபர், நவம்பர் மாதங்களில் எம்ப்ளாயிமெண்ட் நியூஸ் இதழிலும்,www.upsc.gov.இன் இணைய தளத்திலும் வெளியிடப்படுகிறது.இச்சேர்க்கைக்கு நடத்தப்படும் நேர்முகத்தேர்வில் மாணவரின் பொதுவான அறிவுத்திறன் சோதிக்கப்படுகிறது .மேலும் விவரங்களுக்கு கீழுள்ள சுட்டியை காணலாம்
http://www.localindya.com/showmessage/adid/187234.html
.

8 comments:

*இயற்கை ராஜி* January 17, 2010 at 2:43 AM  

for follow up

நட்புடன் ஜமால் January 17, 2010 at 7:14 AM  

நல்ல பகிர்வு

Ungalranga January 17, 2010 at 3:55 PM  

நல்ல பகிர்வு இயற்கை ..
மேலும் எழுதுங்கள்..

Very Informative..thank U!

அமிர்தவர்ஷினி அம்மா January 18, 2010 at 8:31 AM  

உபயோகமான பகிர்வுக்கு நன்றி

SK January 18, 2010 at 9:57 AM  

நன்றி இயற்கை.

க.பாலாசி January 18, 2010 at 10:35 AM  

என்னமாதிரி சின்னப்பசங்களுக்கு பயனுள்ள பகிர்வுங்க...நன்றி...

T.V.ராதாகிருஷ்ணன் January 18, 2010 at 10:46 AM  

நல்ல பகிர்வு

Unknown October 23, 2020 at 5:17 PM  

Very nice article. To find more details about technical colleges in Tamil Nadu at www.collegesignal.com

  © Blogger template 'Fly Away' by Ourblogtemplates.com 2008

Back to TOP