இந்தியாவில் தொழிற்கல்வி சேர்க்கை - வழிமுறைகள் I
எந்த ஒரு பள்ளி மாணவரின் எதிர்காலத் திட்டம் பற்றிக்கேட்டாலும், அவர்களின் கனவு தொழிற்கல்வியாகவே இருக்கிறது.அத்தகைய தொழிர்கல்வி பெறுவதிலும், எந்த மாதிரியான படிப்பு படிப்பது,எந்த துறையில் சேருவது என்பதிலும் தெளிவாகவே இருக்கிறார்கள்.அப்படியான மாணவர்களுக்கு ஒரு ரெப்ரஷிங் தான் இந்தப் பதிவு.
பலப் பல தொழிற்கல்வி படிப்புகள் இருந்தாலும் அனைவரது முதல் கனவாகவும் இருப்பது மருத்துவம்,பொறியியல் இரு படிப்புகள் தான்.
அத்தகைய பொறியியல் கல்வியை இந்தியாவை பெறுவதைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
நாட்டின் சிறந்த பொறியியல் நிலையங்களாய்க் கருதப்படும் ஐஐடி,என்.ஐ.டி,பிட்ஸ் பிலானி போன்ற நிறுவனங்களில் சேருவதற்காக அகில இந்திய அளவில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.அத்தகைய தேர்வுகள் சிலவற்றைப் பற்றி அறிய கீழே கிளிக்குங்கள்
AIEEE - http://aieee.nic.in/aieee2010/aieee/welcome.html
JEE - http://jee.iitd.ac.in/
BITS- http://www.bitsadmission.com/bitsat/bitsatmain.htm
இதல்லாமல், பெரும்பாலான மாநிலங்கள், அம்மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரிகளில் சேர தனித்தனி நுழைவுத்தேர்வுகளை நடத்துகின்றன.
அவ்வாறான தேர்வுகளைப் பற்றி அறிய கீழே கிளிக்கவும்.( இந்த லிங்கில் மருத்துவம்,சட்டம் போன்ற வேறுபல தொழிகல்வி சேர்க்கையைப் பற்றியும் அறியலாம்.)
http://engg.entrancecorner.com/
இந்த அனைத்துத் தேர்வுகளிலும், நீங்கள் வாங்கும் மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.அதன்படி நீங்கள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படுகிறீர்கள். நீங்கள் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளும்போது காலியாக இருக்கும் இடங்கள் மற்றும் கல்லூரிகளின் பட்டியல் உங்களுக்கு தெரிவிக்கப்படும்.அப்பட்டியலில் இருப்பதில் நீங்கள் கேட்கும் இடம் உங்களுக்கு ஒதுக்கப்படுகிறது.சாதி வாரியான இட ஒதுக்கீடும் உண்டு.
இவையனைத்தும் பொதுவான இந்திய அளவிலான வழிமுறைகள்.
தமிழகத்தில் சேர்க்கை, நுழைவுத்தேர்வு இல்லாமலே, நீங்கள் 12ம் வகுப்பில் வாங்கும் மதிப்பெண் அடிப்படையிலேயே இடம் ஒதுக்கப்படுகிறது.அதில் பின்பற்றப்படும் வழிமுறைகளை விரிவாக அடுத்த பதிவில் பார்க்கலாமே.
.
4 comments:
நன்றி இயற்கை பதிவிற்கு.
மற்ற மாநிலங்களில் உள்ள என். ஐ. டி. யில் சேர எந்த நுழைவுத்தேர்வு தேவை ?
இந்த வருடத்திற்கான விண்ணப்ப தேதிகள் முடிந்து விட்டனவா ?
வாங்க SK
என்.ஐ.டி யில் சேர AIEEE தேர்வு எழுத வேண்டும்.இதற்கான கடைசித்தேதி 05/10/2010/மேலும் விவரங்கள் கீழுள்ள சுட்டியில் கிடைக்கும்
http://www.nitt.edu/home/academics/admissions/
நல்ல பகிர்வு
சமீபத்தில் I.A.S தேர்வு பற்றி சில தகவல்கள் வந்தன - பதிவிட நினைத்தேன் - இன்னும் செய்யலை.
வருகைக்கு நன்றி ஜமால் அண்ணா. IAS,IPS பதவிகளுக்கு ஏறத்தாழ சமமான, மாநில அரசால் நடத்தப்படும் GROUP I தேர்வுகளைப் பற்றியும் எழுதுங்கள் அண்ணா. நானும் அவை பற்றி எழுதும் எண்ணத்தில் தான் இருக்கிறேன்
Post a Comment