கல்லூரியைத் தேர்வு செய்யும் முன்..
சில வருஷங்களா,அதிகரிச்சிட்டு வர்ற கல்லூரிகளோட எண்ணிக்கையைப் பார்க்கும்போது,எந்தப் படிப்பும் கனவு காண்பவர்களுக்கு எட்டாக் கனி அல்ல என்பது தெரிகிறது.
ஆனால் இந்த அதிக எண்ணிக்கையிலான கல்லூரிகளில், எத்தனை கல்லூரிகள் தரமான கல்வியைத் தருகின்றன என்பது தெரியவில்லை.
எனவே கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்கும்போது நிறைய அலசி ஆராய வேண்டியிருக்கு.
கவனத்தில் கொள்ளவேண்டியவை சில:
1.கல்லூரியில் கேம்பஸ் பிளேஸ்மெண்ட் இருக்குதான்னு மட்டும் பாக்காதீங்க.கேம்பஸ்ல செலக்ட் ஆன ஸ்டுடண்ஸ் கம்பெனில சேர்ராங்களான்னும் பாருங்க. ஏன்னா,ரெக்ரூட் பண்ற பல கம்பெனிகள் கால் லெட்டரே அனுப்பறதில்லை. ஸ்டூடண்ஸ் கால் லெட்டர்காக, காத்திருந்து, காத்திருந்து, பின் வேற வேலை தேடவேண்டிய நிலைக்கு ஆளாகறாங்க.
2.ஒரு தரமான கல்லூரியில் அதிகமா ஸ்கோப் இல்லாத பிரான்ஞ் ஆ? அல்லது தரமில்லாத கல்லூரியில் ஸ்கோப் அதிகமான பிரான்ஞ் ஆ ங்கிற நிலை வந்தால் கல்லூரி தரத்திற்கே முக்கியத்துவம் குடுங்க.கல்லூரி தரமா இல்லைன்னா, ஆய்வகமோ, நூலகமோ எந்த வசதியும் சரியா இருக்காது.எப்பேர்பட்ட பிரான்ச்ல படிச்சாலும்,ஸ்டஃப் இல்லைன்னா கண்டிப்பா முன்னேற முடியாது.
3.கல்லூரிகள்ல கற்பிக்கற முறையைப் பத்தி, அங்க ஏற்கனவே படிக்கற மாணவர்கள்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோங்க.மனப்பாடம் பண்றதை மட்டும் ஊக்குவிக்கற கல்லூரிகளை ஒதுக்கிடுங்க. ஏன்னா..தொழிற்கல்விங்கறது பள்ளிப்படிப்பு மாதிரி புத்தகத்துல இருக்கறதை தெரிஞ்சிக்கறது மட்டும் அல்ல.அதை பிராக்டிகலா அப்ளை பண்ணவும் யோசிக்கணும்.அதனால அதிகமான ப்ராக்டிகல் ஓரியண்டட் அப்ரோச் உள்ள கல்லூரியைத் தேர்ந்தெடுங்க.
இதெல்லாம் தேவையான விவரங்கள்.இதெல்லாம் எப்படி நமக்கு கிடைக்கும்ன்னு பார்த்தா,கண்டிப்பா எந்த கல்லூரியும் விளம்பரங்கள் வாயிலாகத் தருவதில்லை.அக்கல்லூரியில் படிப்ப(த்த)வர்கள்,வேலை செய்ப(த)வர்கள் இவங்களோட தொடர்பு கொள்றதால மட்டும் தான் உண்மை விவரங்கள் கிடைக்கும் .
இதையெல்லாம் வச்சி தேர்ந்தெடுத்தால் போதும்.கண்டிப்பா நல்ல தரமான கல்லூரியில் தான் சேருவீங்க.சேர்ந்தப்புறம்..ஆஹா.. நல்ல காலெஜ்ல சேர்ந்தாச்சி..இனிமே லைப் ஜாலிதான்னு என்ஜாய் பண்ண ஆரம்பிச்சிடாதீங்க.படிப்புலயும் கொஞ்சம் கவனம் வையுங்க.
போன வருடத்திற்கான கல்லூரிகளின் கட் ஆஃப் மதிப்பெண்களைத் தெரிந்து கொள்ள கீழே கிளிக்குங்கள்
cutoffmarks2008and2007
.
3 comments:
Thank you Iyarkkai!!!
இது நல்லதொரு விழிப்புணர்வு.
இது போன்ற செய்திகளை தங்கள் வலையிலும் வெளியிட்டு இங்கே சுட்டி கொடுத்து விடுங்கள்.
Sri Ramakrishna Engineering College is an autonomous Engineering college in India founded by Sevaratna Dr. R. Venkatesalu. It is affiliated with the Anna University in Chennai, and approved by the All India Council for Technical Education of New Delhi.
Post a Comment