Wednesday, January 20, 2010

அறிவிப்பு + செய்திப்பகிர்வு

விப்ரோ நிறுவனம் 24 ஜனவரி அன்று மாணவர்களுக்கு ஹைதராபாதில் வேலைக்கான தேர்வு நடத்துகிறது. கீழே உள்ள படத்தில் அனைத்து விவரங்களும் உள்ளன. முடிந்த வரை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.



நன்றி : மகாலட்சுமி (பகிர்விற்கு)


செய்திப்பகிர்வு :

நேற்று இந்திய மத்திய அரசு 44 நிகர் நிலை பல்கலை கழகத்தின் உரிமத்தை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. எதிர் காலத்தில் நிகர் நிலை பல்கலை கழகம் இருக்க கூடாது எனவும் திரு. சிபல் அவர்கள் தெரிவித்து உள்ளார். ரத்து செய்யப்பட்ட நிகர் நிலை பல்கலை கழகத்தின் விவரங்கள் இங்கு உள்ளன. வருகின்ற கல்வி ஆண்டில் சேரும் மாணவர்கள் கொஞ்சம் யோசித்து சேரும் படி கேட்ட்கொள்ள படுகிறார்கள்.

அன்புடன்
எஸ். கே.

Sunday, January 17, 2010

கல்லூரியைத் தேர்வு செய்யும் முன்..

சில‌ வ‌ருஷ‌ங்க‌ளா,அதிக‌ரிச்சிட்டு வ‌ர்ற‌ க‌ல்லூரிக‌ளோட‌ எண்ணிக்கையைப் பார்க்கும்போது,எந்தப் படிப்பும் க‌ன‌வு காண்ப‌வ‌ர்க‌ளுக்கு எட்டாக் க‌னி அல்ல‌ என்ப‌து தெரிகிற‌து.
ஆனால் இந்த‌ அதிக‌ எண்ணிக்கையிலான‌ க‌ல்லூரிக‌ளில், எத்த‌னை க‌ல்லூரிக‌ள் த‌ரமான‌ க‌ல்வியைத் த‌ருகின்ற‌ன‌ என்ப‌து தெரிய‌வில்லை.
என‌வே க‌ல்லூரிக‌ளைத் தேர்ந்தெடுக்கும்போது நிறைய‌ அல‌சி ஆராய‌ வேண்டியிருக்கு.
க‌வ‌னத்தில் கொள்ள‌வேண்டிய‌வை சில‌:


1.க‌ல்லூரியில் கேம்ப‌ஸ் பிளேஸ்மெண்ட் இருக்குதான்னு ம‌ட்டும் பாக்காதீங்க‌.கேம்ப‌ஸ்ல‌ செல‌க்ட் ஆன‌ ஸ்டுட‌ண்ஸ் க‌ம்பெனில‌ சேர்ராங்க‌ளான்னும் பாருங்க‌. ஏன்னா,ரெக்ரூட் ப‌ண்ற‌ ப‌ல‌ க‌ம்பெனிக‌ள் கால் லெட்ட‌ரே அனுப்ப‌ற‌தில்லை. ஸ்டூட‌ண்ஸ் கால் லெட்ட‌ர்காக‌, காத்திருந்து, காத்திருந்து, பின் வேற வேலை தேட‌வேண்டிய‌ நிலைக்கு ஆளாக‌றாங்க‌.

2.ஒரு த‌ர‌மான‌ க‌ல்லூரியில் அதிக‌மா ஸ்கோப் இல்லாத‌ பிரான்ஞ் ஆ? அல்ல‌து த‌ர‌மில்லாத‌ க‌ல்லூரியில் ஸ்கோப் அதிக‌மான‌ பிரான்ஞ் ஆ ங்கிற நிலை வ‌ந்தால் க‌ல்லூரி த‌ர‌த்திற்கே முக்கிய‌த்துவ‌ம் குடுங்க‌.க‌ல்லூரி த‌ர‌மா இல்லைன்னா, ஆய்வ‌க‌மோ, நூல‌க‌மோ எந்த‌ வ‌ச‌தியும் ச‌ரியா இருக்காது.எப்பேர்ப‌ட்ட‌ பிரான்ச்ல‌ ப‌டிச்சாலும்,ஸ்ட‌ஃப் இல்லைன்னா க‌ண்டிப்பா முன்னேற‌ முடியாது.


3.கல்லூரிக‌ள்ல‌ க‌ற்பிக்க‌ற‌ முறையைப் ப‌த்தி, அங்க‌ ஏற்க‌ன‌வே ப‌டிக்க‌ற‌ மாண‌வ‌ர்க‌ள்கிட்ட‌ கேட்டு தெரிஞ்சிக்கோங்க‌.ம‌ன‌ப்பாட‌ம் ப‌ண்ற‌தை ம‌ட்டும் ஊக்குவிக்க‌ற‌ க‌ல்லூரிக‌ளை ஒதுக்கிடுங்க‌. ஏன்னா..தொழிற்க‌ல்விங்க‌ற‌து ப‌ள்ளிப்படிப்பு மாதிரி புத்த‌க‌த்துல‌ இருக்க‌ற‌தை தெரிஞ்சிக்க‌ற‌து ம‌ட்டும் அல்ல‌.அதை பிராக்டிக‌லா அப்ளை ப‌ண்ண‌வும் யோசிக்க‌ணும்.அத‌னால‌ அதிக‌மான‌ ப்ராக்டிக‌ல் ஓரிய‌ண்ட‌ட் அப்ரோச் உள்ள‌ க‌ல்லூரியைத் தேர்ந்தெடுங்க‌.

இதெல்லாம் தேவையான‌ விவ‌ர‌ங்க‌ள்.இதெல்லாம் எப்ப‌டி ந‌ம‌க்கு கிடைக்கும்ன்னு பார்த்தா,க‌ண்டிப்பா எந்த‌ க‌ல்லூரியும் விள‌ம்ப‌ர‌ங்க‌ள் வாயிலாக‌த் த‌ருவ‌தில்லை.அக்க‌ல்லூரியில் ப‌டிப்ப‌(த்த‌)வ‌ர்க‌ள்,வேலை செய்ப‌(த‌)வ‌ர்க‌ள் இவ‌ங்க‌ளோட‌ தொட‌ர்பு கொள்ற‌தால‌ ம‌ட்டும் தான் உண்மை விவ‌ர‌ங்க‌ள் கிடைக்கும் .
இதையெல்லாம் வ‌ச்சி தேர்ந்தெடுத்தால் போதும்.க‌ண்டிப்பா ந‌ல்ல த‌ர‌மான‌ க‌ல்லூரியில் தான் சேருவீங்க‌.சேர்ந்த‌ப்புற‌ம்..ஆஹா.. ந‌ல்ல‌ காலெஜ்ல‌ சேர்ந்தாச்சி..இனிமே லைப் ஜாலிதான்னு என்ஜாய் ப‌ண்ண ஆர‌ம்பிச்சிடாதீங்க‌.ப‌டிப்புல‌யும் கொஞ்ச‌ம் க‌வ‌ன‌ம் வையுங்க‌.

போன‌ வ‌ருட‌த்திற்கான‌ க‌ல்லூரிக‌ளின் க‌ட் ஆஃப் மதிப்பெண்க‌ளைத் தெரிந்து கொள்ள‌ கீழே கிளிக்குங்க‌ள்
cutoffmarks2008and2007

.

இந்தியாவில் தொழிற்கல்வி(மருத்துவம்) சேர்க்கை - வழிமுறைகள்

மருத்துவக் கல்வி சேர்க்கையும், பொறியியல் சேர்க்கை போன்ற வழிமுறைகளையே உள்ளடக்கியது.
மருத்துவக் கல்லூரிகளிலும் அரசுக் கல்லூரிகள்,தனியார் கல்லூரிகள் என இரு பிரிவுகள் உண்டு.

அரசுக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே நடைபெறுகிறது..
மாணவன் +2 வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் கட் ஆப் மதிப்பெண் கணக்கிடப்பட்டு,தரப்பட்டியல் தயாரிக்கப்பட்டு,அதன் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது.மருத்துவப்படிப்பில் சேர பயாலஜியை ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும்.
+2 வில் பிஸிக்ஸ்,கெமிஸ்ட்ரி,பயாலஜி மூன்று பாடங்களில் குறிப்பிட்ட மாணவன் 200க்குப் பெற்ற மதிப்பெண்கள் முறையே 50,50,100க்கும் மாற்றம் செய்யப்படுகிறது.(Physics and Chemistry marks converted to the base of 50 each and Biologymarks converted to the base of 100)
அதன் அடிப்படையில் தரப்பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
தரப்பட்டியல் தயாரிக்கும்போது ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால்,அவர் மற்ற பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள்,அவர்களின் பிறந்த தேதி,போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு தயாரிக்கப்படுகிறது.அத்தரப்பட்டியல்படி கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டு,இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

தனியார் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டின் அடிப்ப்டையிலும் இடங்களை நிரப்புகின்றன. நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேர்வதற்கான வழிமுறைகள் கல்லூரிக்கு கல்லூரி மாறுபடுகிறது.இதற்கு அந்தக் கல்லூரி நிர்வாகங்களையே நேரடியாக அணுகுவது நன்மை பயக்கும்.

இந்தியா முழுவதுமுள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

எய்ம்ஸ்,ஜிப்மர் போன்ற கல்லூரிகள் தனித்தனி நுழைவுத் தேர்வுகளை நடத்துகின்றன.அதற்கான விவரங்கள் கீழுள்ள சுட்டியில் உள்ளது.
http://www.successcds.net/MedicalEntranceExam/
http://alerts.education4india.com/3504/cmc-mbbs-admission-2010/
http://www.mbbsadmission.com


மேலும் அந்நிறுவனங்களின் வலைதளங்களும் தேவையான விவரங்களைத் தரும்.
http://www.aiims.edu/
http://www.jipmer.edu/
இந்த பதிவுகள் தொழிற்கல்வி சேர்க்கைமுறைகளைப் பற்றிய ஒரு தெளிவைத் தந்திருக்கும் என நம்புகிறோம்.

அடுத்தப் பதிவில் கல்லூரியைத் தேர்ந்தெடுக்கும் போது, முக்கியமாகப் பார்க்கவேண்டிய அம்சங்களைப் பற்றி பார்ப்போம்

Saturday, January 16, 2010

இந்தியாவில் தொழிற்கல்வி சேர்க்கை - வழிமுறைகள் II

தமிழகம் தவிர்த்த பிற மாநிலங்களிலுள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைப் பற்றி கடந்த பதிவில் பார்த்தோம்.
தமிழகக் கல்லூரிகளைப் பொறுத்தவரை அவை கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்படுகின்றன‌ .

1.அண்ணா பல்கலைக் கழகங்களின் கீழ்வரும் கல்லூரிகள்.
அ.அரசு பொறியியல் கல்லூரிகள்
ஆ.அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள்
இ. சுயநிதி பொறியுயல் கல்லூரிகள்

2.நிகர்நிலை பல்கலைக் கழகக் கல்லூரிகள்.

அண்ணா பல்கலைக் கழகம் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.

அவை.
1.அண்ணா பல்கலைக் கழகம், சென்னை
2.அண்ணா பல்கலைக் கழகம், கோவை
3.அண்ணா பல்கலைக் கழகம், திருச்சி
4.அண்ணா பல்கலைக் கழகம், நெல்லை

அந்தந்த மாவட்டக் கல்லூரிகள் மற்றும் அருகிலுள்ள மாவட்டக் கல்லூரிகள் அண்ணா பல்கலைக் கழகத்தின் குறிப்பிட்ட பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ளன.தமிழகத்தின் பெரும்பாலான பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலையுடனே இணைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பிரிவும் தனியான சேர்க்கை அறிவிப்புகளை வெளியிட்டு,அதன் உறுப்புக் கல்லூரிகளில் சேர்க்கையை நடத்துகின்றன.எல்லா அண்ணா பல்கலைக் கழகங்களிலும் ஒரே விதமான சேர்க்கை வழிமுறையே பின்பற்றப்படுகிறது.


மாணவன் +2 வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தரப்பட்டியல் தயாரிக்கப்பட்டு,அதன் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது.
+2 வில் பிஸிக்ஸ்,கெமிஸ்ட்ரி,மாத்ஸ் மூன்று பாடங்களில் குறிப்பிட்ட மாணவன் 200க்குப் பெற்ற மதிப்பெண்கள் முறையே 50,50,100க்கும் மாற்றம் செய்யப்படுகிறது.(Physics and Chemistry marks converted to the base of 50 each and Maths marks converted to the base of 100)
அதன் அடிப்படையில் தரப்பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
தரப்பட்டியல் தயாரிக்கும்போது ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால்,அவர் மற்ற பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள்,அவர்களின் பிறந்த தேதி,போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு,அதற்கேற்ப தரப்பட்டியல் தயாரிக்கப்படுகிறது.அத்தரப்பட்டியல்படி கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டு,இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
இவ்வாறான சேர்க்கை அல்லாமல் நிர்வாக ஒதுக்கீடு என்னும் சில இடங்கள் எல்லா கல்லூரிகளிலும் நிர்வாகத்தால் நிரப்பப்படுகின்றன.இதற்காக அனைத்துக் கல்லூரிக் கூட்டமைப்பு நுழைவுத்தேர்வு நடத்தி சேர்க்கையை நடத்துகிறது.இந்த இடங்களில் சேர்வதற்கு குறிப்பிட்ட கல்லூரிகளை நேரடியாக அணுகுவதே சாலச் சிறந்த‌து‌

நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்

நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் அவற்றுக்கேயுரிய தனியான சேர்க்கை வழிமுறைகளை வைத்திருக்கின்றன. சில பல்கலைகள் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வுகளை நடத்துகின்றன. சில பல்கலைக் கழகங்கள் +2 மதிப்பெண் அடிப்படையிலேயே இடமளிக்கின்றன.அப்பல்கலைக் கழகங்களின் இணைய தளத்தை அவ்வபோது பார்ப்பது,சேர்க்கை குறித்த சரியான, மேம்படுத்தப்பட்ட தகவல்களை அளிக்கும்.

இதல்லாமல் இந்திய ராணுவம் SSB board மூலமாக +2 படித்த மாணவர்களுக்கு பொறியியல்,மருத்துவம் போன்ற படிப்புகளை இலவசமாக வழங்குகிறது.இதில் ஒரு நிபந்தனை என்னவெனில் படிப்பு முடித்தவுடன் சில ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிய வேண்டும்.இதற்கான அறிவிக்கை அக்டோபர், நவம்பர் மாதங்களில் எம்ப்ளாயிமெண்ட் நியூஸ் இதழிலும்,www.upsc.gov.இன் இணைய தளத்திலும் வெளியிடப்படுகிறது.இச்சேர்க்கைக்கு நடத்தப்படும் நேர்முகத்தேர்வில் மாணவரின் பொதுவான அறிவுத்திறன் சோதிக்கப்படுகிறது .மேலும் விவரங்களுக்கு கீழுள்ள சுட்டியை காணலாம்
http://www.localindya.com/showmessage/adid/187234.html
.

Friday, January 15, 2010

இந்தியாவில் தொழிற்கல்வி சேர்க்கை - வழிமுறைகள் I

எந்த ஒரு பள்ளி மாணவரின் எதிர்காலத் திட்டம் பற்றிக்கேட்டாலும், அவர்களின் கனவு தொழிற்கல்வியாகவே இருக்கிறது.அத்தகைய தொழிர்கல்வி பெறுவதிலும், எந்த மாதிரியான படிப்பு படிப்பது,எந்த துறையில் சேருவது என்பதிலும் தெளிவாகவே இருக்கிறார்கள்.அப்படியான மாணவர்களுக்கு ஒரு ரெப்ரஷிங் தான் இந்தப் பதிவு.
பலப் பல தொழிற்கல்வி படிப்புகள் இருந்தாலும் அனைவரது முதல் கனவாகவும் இருப்பது மருத்துவம்,பொறியியல் இரு படிப்புகள் தான்.
அத்தகைய பொறியியல் கல்வியை இந்தியாவை பெறுவதைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
நாட்டின் சிறந்த பொறியியல் நிலையங்களாய்க் கருதப்படும் ஐஐடி,என்.ஐ.டி,பிட்ஸ் பிலானி போன்ற நிறுவனங்களில் சேருவதற்காக அகில இந்திய அளவில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.அத்தகைய தேர்வுகள் சிலவற்றைப் பற்றி அறிய கீழே கிளிக்குங்கள்

AIEEE - http://aieee.nic.in/aieee2010/aieee/welcome.html

JEE - http://jee.iitd.ac.in/

BITS- http://www.bitsadmission.com/bitsat/bitsatmain.htm

இத‌ல்லாமல், பெரும்பாலான மாநிலங்கள், அம்மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரிகளில் சேர தனித்தனி நுழைவுத்தேர்வுகளை நடத்துகின்றன.
அவ்வாறான தேர்வுகளைப் பற்றி அறிய கீழே கிளிக்கவும்.( இந்த லிங்கில் மருத்துவம்,சட்டம் போன்ற‌ வேறுபல தொழிகல்வி சேர்க்கையைப் பற்றியும் அறியலாம்.)

http://engg.entrancecorner.com/‌

இந்த அனைத்துத் தேர்வுகளிலும், நீங்கள் வாங்கும் மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.அதன்படி நீங்கள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படுகிறீர்கள். நீங்கள் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளும்போது காலியாக இருக்கும் இடங்கள் மற்றும் கல்லூரிகளின் பட்டியல் உங்களுக்கு தெரிவிக்கப்படும்.அப்பட்டியலில் இருப்பதில் நீங்கள் கேட்கும் இடம் உங்களுக்கு ஒதுக்கப்படுகிறது.சாதி வாரியான இட ஒதுக்கீடும் உண்டு.

இவையனைத்தும் பொதுவான இந்திய அளவிலான வழிமுறைகள்.

தமிழகத்தில் சேர்க்கை, நுழைவுத்தேர்வு இல்லாமலே, நீங்கள் 12ம் வகுப்பில் வாங்கும் மதிப்பெண் அடிப்படையிலேயே இடம் ஒதுக்கப்படுகிறது.அதில் பின்பற்றப்படும் வழிமுறைகளை விரிவாக அடுத்த பதிவில் பார்க்கலாமே.

.

Friday, December 18, 2009

கல்வி உதவித்தொகை அறிவிப்பு

இயக்குநர், அரசு பள்ளிக்கல்வித்துறையினால் வழங்கப்படும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் நேரிடையாக பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கான அறிவிப்பு.

குறிப்புகள் :
௧டந்த மார்ச் 2009 நடந்த பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும். மதிப்பெண் குறித்த அட்டவணை இணைத்துள்ள அறிவிப்பில் காணலாம்.

அறிவியல், வரலாறு, வணிகவியல், வொகேஷனல் என்று அனைத்து பிரிவில் இருந்தும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் சென்று சேரவேண்டிய கடைசி தேதி : 24 . 12 . 2009


மேலும் விவரங்கள்
இணைத்துள்ள கோப்பிலும்,
உடன் இதற்கான விண்ணபங்களை கீழ்க்கண்ட தமிழ்நாடு அரசு இணையத்தளத்திலிருந்து தரவிறக்கிக்கொள்ளலாம்
http://www.tn.gov.in/dge

முக்கியகுறிப்பு: இந்தப்பதிவினை படிப்பவர்கள் முடிந்தமட்டிலும் தேவைப்படுவோரிடம் பகிருங்கள்.

Monday, October 5, 2009

இளநிலைப்பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு மற்றும் உதவித்தொகை அறிவிப்பு பகிர்வு

உதவித்தொகை அறிவிப்பு

இந்திய ரிசர்வ் வங்கி, 150 இளநிலைப் பட்டதாரிகளுக்கான தனது உதவித்தொகையினைப் பற்றிய அறிவிப்பினை கீழ்க்கண்ட இணையதளத்தினில் வெளியிட்டள்ளது.

Website: www.rbi.org.in/youngscholars.aspx

ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி: 21.10.2009

Selection test for the RBI young scholars’ award will be held on January 10,2010.

இளநிலை பட்டதாரிகள் எந்த துறையில் இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு 18 முதல் 23 .

இது 5 அக்டோபர் தேதி இட்ட ஹிந்து நாளிதழிலும் வெளிவந்தது உள்ளது.
நன்றி : தி hindu .

வேலைவாய்ப்பு:

2008 - 2009ல் பி.ஈ, பி.டெக், எம்.சி.ஏ, எம்.எஸ்ஸி படித்த பட்டதாரிகளுக்கு ஃபோர்டு நிறுவனம் தனது வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது.

www.india.ford.com/careers

மேலதிக தகவலுக்கு கீழே இருக்கும் படத்தினை கிளிக்கி பெரிதாக்கி விபரம் அறிந்துகொள்ளவும்.



நன்றி: மெயிலில் இந்த தகவலை பகிர்ந்த நண்பருக்கு.

இந்தப் பதிவினைப் படிப்பவர்கள் மேற்கூறியுள்ள தகவல்களை தேவைப்படுபவர்களிடம், அறிந்தவர்களிடம், தெரிந்தவர்களிடம் பகிருங்கள். காதுள்ளவன் கேட்கக் கடவன் என்பதைப் போல, தேவையுள்ளவர்கள் பயன்பெற்றுக்கொள்ளட்டும். அதுவே இந்தப் பதிவின் நோக்கம்.

  © Blogger template 'Fly Away' by Ourblogtemplates.com 2008

Back to TOP