கல்வி, உயர்கல்வி பற்றிய தகவல்கள் ஒரு முயற்சி.
அன்பின் தோழர்களே, தோழிகளே...
கல்வி ஒரு மனிதனை முழுமை ஆக்குகிறது. ஒரு நாட்டின் வளர்ச்சி அந்த நாட்டின் மக்கள் தொகையில் எவ்வளவு பேர் கல்வி பெறுகிறார்கள் என்பதிலும் இருக்கிறது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள படம் ஒரு உதாரணம். ஒரு மாணவன் தனது பள்ளிப்படிப்புக்கு பிறகு எத்துனை முறையில் தனது வாழ்வினை தேர்வு செய்யலாம் என்பதற்கு. எனக்கு இ -மெயிலில் வந்தது. அதை எழுதி உள்ள Prof.விஜய் நாவலே மற்றும் மகேஷ் நார்கே அவர்களுக்கு நன்றி.
ஒவ்வொரு துறை படிப்பிற்கும் அதற்கு தகுந்த வேலை, மற்றும் படிப்பு அனைத்தும் இருக்கிறது. ஆனால் என்ன படிப்பது, எங்கு படிப்பது, எவ்வளவு செலவு ஆகும், இந்த துறை படித்தால் என்ன வேலைக்கு செல்லலாம், இது போன்று மாணவர்கள் இடத்தும் பெற்றோர்கள் இடத்தும் ஆயிரம் கேள்விகள். அதோடு பல துறை பற்றி நிறைய பேருக்கு தெரியாமலையே உள்ளது.
மேலும் வெளிநாடு சென்று படிப்பது ஒரு குதிரை கொம்பினை போன்ற எண்ணம் நிலவுகிறது. நல்ல மாணவனாக இருக்கும் பட்சத்தில் வெளிநாட்டில் கல்வி கற்க நிறைய வாய்ப்புகள் உள்ளது. அவற்றை பற்றி எங்களுக்கு தெரிந்த வரையில் இங்கு ஒன்று படுத்தி அனைவருக்காகவும் எழுதலாம் என்ற முதல் முயற்சி.
அதே போல் இந்திய அரசு, தனியார் நிறுவனங்கள் என்று பல வகையில் பண உதவியும் செய்யப்பட்டு வருகிறது. இதை பற்றிய செய்தியும் பலருக்கு சென்று அடைவதில்லை. அதன் முயற்சியாக இங்கே அனைத்தையும் தொகுத்து அளிக்கலாம் என்று உள்ளோம். நீங்களும் உங்களது துறை, அதில் உள்ள உயர் கல்வி வாய்ப்புகள் பற்றிய அனைத்து தகவலையும் இங்கு பகிர்ந்தது கொள்ள விரும்பினால் தயவு செய்து இங்கே தெரியப்படுத்தவும்.
அதே போல் நாளிதழ், வார இதழ், கல்விக்கே தனியாக உள்ள நாளேடுகள் இவற்றில் ஏதேனும் உங்களுக்கு தெரியும் பொழுது இங்கே அனைவருக்கும் தெரியப்படுத்தலாம்.
முடிந்த வரை வாரம் ஒரு பதிவு என்ற விகிதத்தில் தர முயல்கிறோம். பதிவுகள் ஒவ்வொரு திங்கள் காலையும் வெளிவரும் படி முயற்சி செய்கிறோம்.
இது இரண்டு பேருக்காவது உபயோகமாக இருக்கும் என்ற எண்ணத்தில்..
அன்புடன்,
எஸ். கே.
13 comments:
சுபமான ஆரம்பத்துக்கு என் வாழ்த்துக்கள்.
இன்னைக்கு ஆடி 18 அசத்தலான ஆரம்பம்
நன்றி புதுகை தென்றல் அக்கா. :-)
உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!!!!
அருமையான முயற்சி.
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நன்றிபா
அருமையான முயற்சி
நன்றி ஆ. ஞானசேகரன்
நன்றி செல்வா.
all the best s.k.
நன்றி மயில்.
உங்கள் முயற்சி மிகவும் பாராட்டப்படவேண்டிய ஒன்று..
பிறருக்கு உதவ நினைக்கும் உங்கள் நல்லுள்ளத்துக்கு என் பாராட்டுகள் மற்றும் என்னுடைய நன்றிகள்
நன்றி நிலா
பதிவுலக நன்பர்களே – இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் – 3
01. கல்வியின் இன்றையநிலை?
02. சமசீர் கல்வியின் தேவை?
03. தாய் மொழிகல்வியின் தேவை?
நன்றி
http://oviya-thamarai.blogspot.com/2009/10/3_11.html
அன்பின் எஸ்கே, பதி, அமித்து அம்மா, இயற்கை மகள்
நல்ல எண்ணத்தில் எழுந்த நல்ல செயல்
படிப்பவர்கள் அதிகம் இல்லையே எனக் கவலைப்பட வேண்டாம் -
தேவையானவர்கள் மட்டுமெ படிப்பார்கள்
விரைவில் பயன் பெற்றவர்கள் ப்யன் பெறுபவர்கள் என வாசகர் வட்டம் விரியும்
நல்வாழ்த்துகள்
Post a Comment