Monday, August 17, 2009

ஜெர்மனியில் உயர்கல்வி(2) - கேள்வி-பதில்/மேலதிக விவரங்கள்

சென்ற பதிவில், சக பதிவர் அமுதா கிருஷ்ணா கேட்ட சில தகவல்கள் :

'எந்தெந்த நகரங்கள் படிக்க ஏற்றவைகள் (சீதோஷணம்,கட்டணம் குறைவு--போன்றவை)??? '

ஜெர்மனியில் நகரங்களுக்குள் வானிலை ஒண்ணும் பெரிய வேறுபாடு இருக்காது. மொத்தமாக நாலு வித பருவ காலங்களும் உண்டு. தங்குமிடம் பேரு நகரங்கள் குறிப்பாக முனிக், ஸ்டுட்கார்ட், பிராங்க்பர்ட் போன்ற நகரங்கள் கொஞ்சம் அதிக வாடகை இருக்கும். ஆனால் மாணவர்களுக்கு விடுதிகள் இருக்கு. ஆதலால் போன பதிவில் நான் கூறிய விலையில் ஒரு ஆள் எளிதாக காலம் தள்ள முடியும்.

கட்டணம் - ஊருக்கு ஊர் வேறுபடும். ஆனால் கல்லூரி கட்டணம் நான் மேற்கூறிய படி 500 - 750 வரை இருக்கும். இதை தவிர சில குறிப்பிட்ட பாடங்கள் ஒரு செமஸ்டருக்கு 1500 ஈரோக்கள், அதற்கு அதிகமாகவும் உண்டு. நாம் விண்ணப்ப்பிக்கும் பொழுது நன்கு விசாரித்து விண்ணப்பித்தல் நலம்.

இஞ்சினியரிங் அல்லாத மற்ற துறைகள் பற்றியும் ...........??

எனக்கு தெரிந்த வரை MBA, மற்ற மொழிகள், பற்றி எழுத முயற்சி செய்கிறேன்.

போன பதிவை பற்றி சில அம்மக்களிடம் சொல்லி எதாவது கேள்வி இருந்தா கேளுங்க அப்படின்னு சொன்னதின் விளைவு.. இதோ சில 'பாசக்' கேள்விகள் ?? (என்ன எல்லாம் கவலை பாத்தீங்களா அம்மக்களுக்கு .. :-) )

இந்திய சாப்பாட்டு வகைகள் கிடைக்குமா ??

உணவு விடுதிகளில் அதிகம் வட இந்திய உணவுகளே உண்டு. சில தென்னிந்திய வகைகளும் கிடைக்கும். ஆனால் தேடி கண்டு பிடிக்க வேண்டும்.

சமைக்க தேவையான அனைத்தும் கிடைக்குமா ?

அரிசி, பருப்பு, குறிப்பிட்டு சொல்லும் படியான இந்திய காய்கறிகள் வெண்டைக்காய், முருங்கை இவை அனைத்தும் இந்திய கடைகளில் கிடைக்கும். பேரு நகரங்களில் இது போன்ற கடைகள் நிறையவே உண்டு. சிறு நகரங்களில் இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் நகரங்களை பொறுத்தது.

சாதரண காய்கறிகள் உருளை, தக்காளி போன்றவை சூப்பர் மார்கெட்டிலேயே கிடைக்கும். நல்ல தரமானதாகவும் இருக்கும்.

ஜெர்மன் மொழி எங்கு கற்பது?

ஜெர்மன் நாட்டில் மேல் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் ஊர் அளவேனும் ஜெர்மன் இந்தியாவிலேயே படித்தல் நலம். அதற்க்கு சிறந்த இடமும் கோத்தே இன்ச்டிடுடே எனப்படும் ஜெர்மன் மொழிக்கென்றே உண்டான பள்ளிகளே. நான் விசாரித்து அறிந்த வரையில் இங்கு மிக நேர்த்தியாகவும், நன்றாகவும் கற்றுத்தருகிறார்கள். இதை தவிர மேலும் பல தனியார் வகுப்பளும் நடக்கின்றன.

ஜெர்மன் பல்கலைகழகங்கள் பற்றிய ஒரு அறிமுகம் :

ஜெர்மனியில் முன்னூறுக்கும் மேற்பட்ட பல்கலை கழகங்கள் உள்ளன. இவை அனைத்தையும் மூன்று விதமாக பிரிக்கலாம்.

1. Technical University (Technische Universität - TU)

2. University (Universität)

3. University of Applied Science (Fachhochschule - FH).


இந்த அனைத்து பல்கலை கழகங்களிலும் கலை, அறிவியல், இன்ஜினியரிங், மொழி, மருத்துவம் என்று அனைத்து பதிப்புக்களும் படிக்கலாம்.

Technical University (TU) - இங்கு பாடங்கள் படிப்பவர்கள் மேலும் ஆராய்ச்சியை செய்கின்ற நோக்கிலேயே பாடங்கள் இருக்கும். இவையே இங்கும் அதிக மதிப்பு பெற்ற பல்கலை கழகங்களாக எண்ணலாம். நம்ம ஊரு பாஷைல சொல்லனும்னா நம்ம ஊரு ஐ. ஐ. டி.'க்கள் போன்று என்று சொல்லலாம். இவை ஜெர்மனியில் 14 or 15 உள்ளன.

University of Applied Sciences (FH) - இவை படித்து முடித்து வேலைக்கு செல்கிறார்கள் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டவை. படிப்பும் பயிற்சி சார்ந்தவையாக இருக்கும்.

University - இரண்டும் கலந்த ஒன்றாக இருக்கும்.

இதில் எதுவும் உறுதியாக இது தான் என்று கிடையாது. FH படித்தவர்கள் மேலும் படிக்க விரும்பும் பட்சத்தில் சில தேர்வுகள் எழுதி மேலும் படிக்கலாம். அவ்வளவே.

ஜெர்மனியில் செமஸ்டர்கள் இரு தடவை தொடங்கும்.

1. Winter - அக்டோபர் முதல் வாரம்
2. Summer - ஏப்ரல் முதல் வாரம்

இதற்கான விண்ணப்பிக்க கடைசி நாட்கள் யுனிவர்சிட்டி பொறுத்து வேறு படும். ஆனால் முறையே

ஜூன் அல்லது ஜூலை 15 தேதிகள் அக்டோபர் செமஸ்டருக்கும்,
டிசம்பர் அல்லது ஜனவரி 15 ஏப்ரல் மாத செமஸ்டருக்கும் கடைசி தேதியாக இருக்கும்.

மேலதிக தகவல்களுக்கு ??

விண்ணப்பங்கள், ஜெர்மனியில் மேற்படிப்பு என்ற மேலதிக தகவல்களுக்கு ஒரே சிறந்த இடம் DAAD எனப்படும் ஜெர்மன் நாட்டு கல்விக்கு உதவி தரும் மையமே.

கீழே உள்ள லிங்கிற்கு சென்று ஜெர்மன் பற்றிய அனைத்து தகவல்களையும் பெறலாம்.

DAAD

இதற்கான தொடர்பு அலுவலகம் சென்னையிலேயே உள்ளது. அதற்கான லிங்க்

DAAD சென்னை

இங்கு மாதத்திற்கு இரண்டு முறை இதற்கான தகவல் வகுப்புகள் நடக்கின்றன. அங்கு பங்குபெருபவர்களுக்கு அனைத்து தகவல் கொண்ட CD'யும் இலவசமாக கிடைக்கும்.

தகவல் : கல்லூரியில் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் உங்கள் கல்வி கல்லூரியில் இந்த தகவல் குறித்த செமினார் நடத்த விரும்பினால் சென்னை - DAAD அலுவலகத்தை முறையே தொடர்பு கொண்டால் அவர்கள் உங்கள் கல்லூரியிலயே வந்து அனைத்து தகவல்களும் தருவார்கள்.

மேலும் கேள்வி இருக்கும் பட்சத்தில் இங்கு தெரியப்படுத்தவும். முடிந்த வரை எனக்கு தெரிந்தவற்றை கேட்டு சொல்கிறேன்.

அடுத்த பதிவில் : நான் மேலே சொன்ன இணையதளத்தில் எவ்வாறு தேடுவது, விண்ணப்பிக்க தேவை படும் விவரங்கள், அதை எல்லாம் எவ்வாறு சரியாக செய்ய வேண்டும், போன்ற தகவல் தரலாம் என்று உள்ளேன்.

அன்புடன்
எஸ். கே.

21 comments:

வினையூக்கி August 17, 2009 at 9:49 AM  

அருமை நண்பா

அமுதா கிருஷ்ணா August 17, 2009 at 9:52 AM  

மிக நன்றி! அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்கிறோம்.

Asfar August 17, 2009 at 4:15 PM  

very good post...

nila August 17, 2009 at 8:57 PM  

am trying for doing my phd in germany or any other european countries... can i get some information reg that

SK August 17, 2009 at 11:28 PM  

நன்றி வினையூக்கி, அமுதா கிருஷ்ணா.

Thank you Asfar.

Nila, Yes, I will be giving details for that in next posts. Other if you need some specific information please write me an email. I will try to give more informations based on your area of study etc.,

you can write to friends.sk@gmail.com

nila August 18, 2009 at 9:11 AM  

ya thanks a lot... am trying for phd in immunology... i have got seat here in tamilnadu.. wil be registering in a month... so even if it s like some sandwich programme its ok.... i have been applying to so many countries n sending mails to many profs.. but everything went in vain.. hope ur informations will be useful for me... i prefer other european countries to germany..

SK August 18, 2009 at 9:17 AM  

ok. Other european countries like ?? You have something in mind or have you tried already.

nila August 18, 2009 at 9:49 AM  

other european countries like denmark, spain, switzerland, etc.. i have tried already.. i have sent mails to profs frm some univ in those countries..

SK August 18, 2009 at 9:53 AM  

Nila, I am not sure why you are not prefering Germany.

I dont know whether you have tried Netherlands, Sweden. Please do try.

Becos in Spain they expect Spanish for everything.

nila August 18, 2009 at 12:39 PM  

i have tried in netherlands too... sweden i have mailed a prof.. yet to get her reply....
its not that am not prefering germany... more than germany i prefer other countries.. thats all... i am ok wit any of european univ.. well... as u knw.. research has got nothing to do wit usual application procedures like those for MS.. something more than that s required...as far as d replies i have received r concerned.. they all say that they don have money to fund for a student now..

SK August 18, 2009 at 12:43 PM  

ok. If you are interested in Germany and if you can send me the detailed CV. I can check with couple of friends who are working in some similar field in some research institutes here in Berlin.

RAMYA August 18, 2009 at 3:40 PM  

தகவல்கள் அனைவருக்கும் உபயோகமானது!

பதிவிட்ட தம்பியை பாராட்டுகிறேன்!

Thamarai August 18, 2009 at 4:26 PM  

sema detailed effort..nichayamaa edhu oru 4-5 paerukkavadhu udhavum

nila August 18, 2009 at 7:39 PM  

i have mailed u my resume

SK August 18, 2009 at 8:56 PM  

Thank you Ramya akka & Thamarai

Nila, I havent received anything till now. Will discuss about the same with my friends here and let me know my suggestions.

பதி August 18, 2009 at 11:03 PM  

நல்ல பதிவு SK,

சேர்க்கை விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின், ஜெர்மனி வருவத உறுதி செய்து கொண்டு, ஜெர்மன் மொழியினை நமது ஊரிலேயே கற்கத் துவங்கிவிட்டால் எளிதாக இருக்கும் இல்லையா??

//இவை ஜெர்மனியில் ௧௩ உள்ளன.//

10

//உனிவேர்சிட்டி//

யுனிவர்சிட்டி தானே???

1) DAAD தவிர வேறு வழிகளில் கல்வி உதவித் தொகையுடன் கூடிய மேற்படிப்பு படிக்க இயலாதா???

2) Erasmus Mundus படிப்பைப் பற்றியும் முடிந்தால் உங்கள் பதிவில் குறிப்பிட முயலுங்கள்....

http://ec.europa.eu/education/programmes/mundus/projects/index_en.html

SK August 19, 2009 at 10:04 AM  

நன்றி பதி. பிழைகளை திருத்தி விட்டேன்.

உங்களுடைய கேள்விகளை அடுத்த பதிவின் ஆரம்பத்திற்கு கொண்டு சென்று விடுகிறேன்.

Erasmus Mundus பற்றி ஒரு தனி பதிவு எழுத யோசனை உள்ளது.

*இயற்கை ராஜி* August 22, 2009 at 5:55 PM  

தகவல்கள் அனைவருக்கும் உபயோகமானது

*இயற்கை ராஜி* August 22, 2009 at 5:55 PM  

தகவல்கள் அனைவருக்கும் உபயோகமானது

Unknown August 29, 2009 at 2:22 PM  

really very useful post for our people,thank you very much salutes

SK August 31, 2009 at 3:20 PM  

நன்றி இயற்கை

Thank you Ravi.

  © Blogger template 'Fly Away' by Ourblogtemplates.com 2008

Back to TOP